Thursday, 21 December 2017மனிதச்சங்கிலிபோரட்டம் ஆயத்தக்கூட்டம் 23/11/2017                                            நிர்வாகத்திற்கு நமது பங்களிப்பு...


AIBSNLEA  சார்பாக 20/12/2017 அன்று நமது  BSNL உதவிப்பொது மேலாளர் திரு எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களிடம் KYC mechanisam machine  ஒன்றை நிர்வாகத்திற்கு நாம் கொடுத்து வந்தோம். நமது மாவட்டச்செயலர் தோழர் பிச்சைக்கனி அவர்களிடம் நமது பொது மேலாளர் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த இயந்திரம் கை ரேகையை சரிபார்க்கவல்லது. சந்தாதாரர்களின்  மொபைல் இணைப்புகள் அனைத்தையும் அவர்களது ஆதார் கார்டுகளுடன் இணைக்கும் முயற்சியில் இந்த கருவி  நிர்வாகத்திற்கு உதவும். மேற்படி கருவியை  நமது மாவட்டத்தலைவரும் பகுதிச்செயலர் (தெற்கு) தோழர் நாராயணன் அவர்கள் ஒப்படைக்கும் நிகழ்வில் நமது பொருளாளர் மணிகண்டன் மற்றும் தோழர் அழகு கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.

Friday, 24 November 2017நவம்பர் 23 மனிதச்சங்கிலி போராட்டம் விருது நகர் மாவட்டம்...

Tuesday, 14 November 2017

இந்தியாவெங்கும் போராட்டம் இங்கேயும் போராட்டம்.
Wednesday, 17 May 2017

அகில இந்திய பி எஸ் என் எல் அதிகாரிகள் சங்க முன்னாள் ஆலோசகர் இனி நம்மோடு இருக்கப்போவதில்லை

தோழர்களே!
இதயம் கனத்துப்போனது 
கண்கள் அழுது தீர்த்துக்கொண்டிருக்கிறது. 
ஒரு முப்பதாண்டு தொழிற்சங்க வாழ்க்கை நிழலாய் நிர்மூலமாய் கரைந்து கொண்டிருக்கிறது.
தோழர் வி கே பரமசிவன் அகில இந்திய முன்னாள் ஆலோசகராக   AIBSNLEA சங்கத்தின் செயல்பட்டு கணக்கு அதிகாரியாகப்பணி ஓய்வு பெற்ற தோழர்  VKP என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கபெற்ற மா மனிதன் எனது ஆருயிர் நண்பர் வி கே பரமசிவம் அவர்கள் 16/05/2017 அதிகாலை 0200 மணி அளவில் தொழிலாளர் நலனுக்காக தொழிற்சங்கப்பணிக்காக தத்தம் செய்த சிந்தனையை நிறுத்திக்கொண்டார். 1992 இல் அவர் முதன் முதலாக நோய்வாய்ப்பட்ட நேரம் மதுரை சுமதிமருத்துவமனையில் அவரோடு உடன் இருந்து கவனித்துக்கொண்ட நாட்கள் அலையாய் மனதை வாட்டுகிறது. அறிவொளி இயக்கத்தில் வீதி நாடக நாட்களில் என்னைக்கரைத்துக்கொண்டிருந்த நேரம் வா படிப்போம் நீயும் நானும் சேர்ந்து என்னயும் அவனது களத்தில் சேர்த்துக்கொண்டவர் வி கே பி. கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மா நாட்டில் 2010 டிச அவரை அகில இந்திய ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட தகுதியானவர் என வாதாடும் இடத்தில் நான், ராதா கிருஷ்ணன், ராஜமாணிக்கம் போன்றோர் இருந்தோம், அதன் பிரகாரம் அவர் அகில இந்திய ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்,

2012 இல் நான் பெல்லாரி மாற்றலில் சென்ற பிறகும் ஒரு தாயின் அரவணைப்பைப்போல அன்பை வெளிப்படுத்தியவர் வி கே பி. ஒரு கடிதம் நிர்வாகத்திடம் இருந்து வரப்பெற்ற நேரம். உடனே எனக்கு மெயில் அனுப்பு என்று சொல்லி அதற்கான பதில் எழுதி அந்த நிர்வாக நடவடிக்கையை முடித்து வைத்தார்.2015இல் எனக்கு ஒரு பெரிய தண்டனை நிர்வாகத்தால் தரவிருப்பதாகத்தகவல் தெரிந்ததும் அதற்கான போராட்டக்களத்தை உருவாக்கி அதனால் ஒரு பாதிக்கப்படவிருந்த ஒரு தோழனை காத்தவர் வி கே பி.

2017 இல் அந்த தண்டனைக்காலம் முடிவடையும் போது நிச்சயம் அவரிடம் தான் ஆலோசனைக்காக காத்திருந்தேன். அதற்குள் இயற்கையோடு ஒன்றிப்போனார் வி. கே. பி.

என்றென்றும் நிலைத்திருக்கும் வி கே பி என்னும் பெயர் என் நெஞ்சில் மட்டுமல்ல பி எஸ் என் எல் அதிகாரிகள் சங்க ஊழியர்கள் மத்தியிலும்.
Thursday, 23 March 2017

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்...

 மார்ச் - 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்


தேச விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் ஏராளம். இவர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் தியாகம், தியாகி களின் வரிசையில் மட்டும் பேசப் படுவதோடு
நில்லாமல், அதையும் தாண்டி நிலைத்து நிற்கிறது.

பகத்சிங் நேரடியாக களத்தில் நின்று ஆயுதம் ஏந்தி போராடிய சம்பவங்கள் இரண்டு. ஒன்று லாலா லஜபதி ராயின் மரணத்துக்கு காரணமான சாண்டர்சன் கொலை. மற்றொன்று நாடாளுமன்றத்தில் காலியான இருக்கைகள் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம்.


1928 டிசம்பர் 17 அன்று சாண்டர்சன் கொலை சம்பவத்தின் போது, பகத்சிங் சார்ந்திருந்த இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடி யரசு சங்கத்தின் சார்பில் அச்சடிக்க பட்ட சுவரொட்டியில்,
"ஒரு மனி தனைக் கொல்வதற்கு நாங்கள் வருத்தமடைகிறோம். ஆனால் இந்த மனிதன்
கொடுங் கோன்மையின் ஓர் அங்கமாக இருந்தான். எனவே இந்த மனி தனைக் கொல்வது அவசியமாக இருந்தது. நாங்கள் மனித உயிரை மிகவும் நேசிக்கிறோம். மனிதன் அமைதியையும்
முழு சுதந்திரத் தையும் பெற வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.


இதற்கடுத்து, தொழிற்சங்கங் களின் உரிமைகளை ஒடுக்கும் ‘தொழில் தாவா சட்ட முன்வடிவு’
1929 ஏப்ரல் 8-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்க்கும் வகையிலேயே அன்று நாடாளுமன்றத்தில் பகத்சிங்கும், பட்கேஸ்வர் தத்தும் குண்டு வீசிவிட்டு, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி வெல்லட்டும்) என்று முழக்கமிட்டனர்.


குண்டு தயாரிக்கும்போதே உயிர்ச் சேதம் ஏற்படுத்தாத வகையில்தான் தயாரித்தனர். காலி இருக்கைகளை நோக்கியே அந்தக் குண்டும் வீசப்பட்டது. குண்டை வீசிவிட்டு
தப்பி ஓடக் கூடாது, கைதாகி மக்களிடம் கருத்துகளைப் பரப்பும் மேடை யாக நீதிமன்ற விசாரணையை மாற்ற வேண்டும் என்று முன்பே தங்கள் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தனர். அதுபோலவே அவர்கள் இருவரும் கைதாகினர்.


அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவியது.
நீதிமன்றத்தில் அவர்களின் வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி யது. மக்கள் மத்தியில்
இவர்களின் வாதங்கள் விரிந்த கவனத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், 3 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு தீர்ப்பாயத்தை அமைத்து விசாரித்தது.


சிறையில் பகத்சிங் இருந்த 2 ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து, சுமார் 404 பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்துள்ளார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சுமார் 45 நாட்களுக்கு முன்பு
இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில்,
“நான் ஒரு பயங்கரவாதியல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தை, தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கர வாதியாக இருந்ததில்லை” என்று பிரகடனம் செய்தார்.
‘இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்க ளோடு முடியப்போவதும் இல்லை. மனிதனை, மனிதன் சுரண்டும் சமுக அமைப்பு மாறும் வரை இப் போராட்டம் தொடரும்’ என்பதே அவர்களின் போராட்ட பார்வை.


சிறையில் இருக்கும்போது பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டுக்கு பகத்சிங் எழுதிய வாழ்த்துச்
செய்தி யில், “தோழர்களே, இன்று துப்பாக்கிகளையும், வெடிகுண்டு களையும் கையில்
எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப் போவதில்லை. இளைஞர்கள், தொழில்மயமான பகுதிகளின் சேரிகளிலும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசை களிலும் வாழ்ந்து கொண்டிருக் கும் கோடிக்கணக்கானவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்”
என்றே அறைகூவல் விடுத்தார்.


விடுதலைப் பெற்று 70 ஆண்டு களுக்கு பிறகும் சேரிகளும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசைகளும், ஒடுக்கப்படும் மக்களும் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அவர் களை விழிப்படைய செய்ய வேண் டிய கடமை இந்திய இளைஞர் களுக்கு இருக்கவே செய்கிறது.
பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, அவர் வாசித்த புத்தகத்தின் பக்கங்களில் இருந்து நம் பயணத்தை நாம் தொடர வேண்டியுள்ளது.


கட்டுரையாளர்: ச.லெனின்
சமூக செயற்பாட்டாளர்.

நன்றி தமிழ் தி இந்து 23/03/2017
Wednesday, 22 March 2017

BSNL மற்றும் MTNL நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை கேந்திர கூட்டாளியாக கொண்டு வந்து ,நிர்வாகத்திலும் தனியாரை அனுமதிக்க ஒப்புதல் கொடுத்துள்ள நிதி ஆயோக் முடிவை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .விருதுநகர் GM அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டடத்திற்கு AIBSNLEA தலைவர் தோழர் நாராயணன் AO தலைமை வகித்தார் .SNEA செயலர் திரு செந்தில்குமார் ,AGM(Plg), AIBSNLOA மாநில சங்க நிர்வாகி கனகவேல் ,DGM(Fin), BSNLEU மாவட்ட செயலர் ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .தோழர் இளமாறன் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்ப சேவா BSNL (R ) மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார் .
விருதுநகர்