Saturday, 26 November 2016


கியூபாவின் நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ இன்று காலமானார்

1926 ஆகஸ்டு 13 – கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரும்புத் தோட்டத்தில் பிடல் அய்ஜாந்தி ரோகாஸ்ட்ரோ பிறந்தார்.

காஸ்ட்ரோவின் தந்தை ஏன்ஜல் காஸ்ட்ரோகாஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம்.

ஏன்ஜல் காஸ்ட்ரோ ஒரு பண்ணையார்ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்குபிழைக்க வந்தவர் என்கிறார்கள்.

கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறினார்ஏன்ஜல் காஸ்ட்ரோ கடுமையாக உழைத்து ஒருபண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை பார்த்தார்கள். 1940 ஏக்கர் நிலத்திற்குஉரிமையாளர் ஆனார் ஏன்ஜல்பிடலின் தாய் லினாஇவர் ஒரு க்யூப பெண்மணிஏழை விவசாயின்மகள்.

இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார்மேலும் காஸ்ட்ரோ பிறந்த பின்னரேஇத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்புகிடைத்ததுபிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது ஐந்து வயதில்,சான்டியாகோ டி-க்யூபா சென்றார்.

ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டிற்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பிவைக்கப்பட்டனர்ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர்.

ஆனால் மிகவும் ஏழைஅதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழுக்குடும்பமும் பகிர்ந்துக்கொண்டதுஇதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடுதிரும்பிவிட்டனர்.

ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி தன்னுடைய படிப்பை தொடங்கினார்சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார்பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில்சேர்க்கப்பட்டார்.

1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார்இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்குகம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது. 1945 -ல் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோதுகாஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார்.

ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது.. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றிஎதுவும் தெரியாது.

ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும்நாட்கள்செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார்.

பின் காஸ்ட்ரோ 1945 ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார்இங்குதான் காஸ்ட்ரோகம்யூனிசவாதியாகப் பரிமாணம் பெற்றார்.

கியூபாவின்ச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார்.

கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்திதலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

கியூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர்கியூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார்.

49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார்உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே.

சர்வதேச அளவில்காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரைஅணி சேராஇயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தூரத்தில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப்பேணிய பெருமை இவரைச் சாரும்.

இதைவிட ரஸ்யா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ரஸ்யாவிற்குச் சாதகமாகப் பலபணிகளைச் செய்தார்.

இவர்ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலால் ஈர்க்கப்பட்டார்.கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார்அப்போது இரண்டு முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில்இயங்கி கொண்டிருந்தன.

ஒன்று 1925-இல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிமற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீககுருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சிகாஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்.முதல் வருடமே பிரச்சாரத்திலெல்லாம் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

ஜுலை 26, 1953 ல் மொன்காடாத் ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார் காஸ்ட்ரோநன்றாக திட்டமிடப்பட்டிருந்தும் பிடெலின் வண்டி கோளாறு காரணமாகவும்இருட்டில் மற்றவீரர்கள் வழி தவறியதாலும் அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது.

காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார். 1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்ததுகாஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்துக்காட்டினார்அமெரிக்காவைக் கடுமையாகசாடினார்நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் ‘வரலாறு என்னைவிடுதலை செய்யும்’ (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும்பின் மே 15 1955 ல்காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம்ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும்.

மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள்ஆவர்மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர்மகப்பேற்றின் போது தாய்மார்களின்இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008 ஆம் ஆண்டில் பதவிவிலகினார்அவருக்கு பின் அவரின்தமையன் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதைந்தது
புரட்சியின்
கடைசி மொழிபெயர்ப்பு.
பிடல்...மறைவு.
காஸ்ட்ரோ காலடி தொடர்வோம்.
#மணிமுடி#

பிடல்கா ஸ்ட்ரோவின் மறைவிற்கு விருதுநகர் மாவட்டச் சங்கம் தன் அஞ்சலியை உரித்தாக்குகிறது.

Friday, 30 September 2016

Hunger Strike by United Forum of Executives' Associations of BSNL on 29/09/2016


Day long hunger fast was observed at Virudhunagar by the United Forum of Executives'  Associations of BSNL demanging:


1. Immediate replacement of intermediary pay scales of E1-A and E2-A by standard pay scales of E2 and E3 for JTO and SDE equivalent cadres w.e.f 01.01.2007 as per the recommendation of the Joint Committee.
2. Extending 30% Superannuation benefit to BSNL recruited Employees as per the recommendation of 2nd PRC.
3. Implementation of CPSU Cadre Hierarchy and first Time Bound Promotion as per the recommendation of Joint committee.


Members of AIBSNLEA, AIGETOA and SNEA (I) attended the hunger fast enthusiastically. Com V K Paramasivam  the Ex CHQ advisor felicitated the struggle with a clarion call to the young executives to  be with the Assiociations and to participate in all struggles with full spirit.

Com A.Narayanan , District President, AIBSNLEA
Com M.Pitchaikkani, District Secretary, AIBSNLEA
Com S Senthilkumar, District Secretary, SNEA (I)
Com P.Govindarajan Circle Office bearer SNEA (I)

spoken on the occasion focusing the demands.
Glimpses of the struggle :Saturday, 17 September 2016

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு...


கடவுள் மறுப்பு மட்டுமன்றி...


சுயமரியாதை,
பெண் விடுதலை,
தீண்டாமை ஒழிப்பு,
சாதிப் பாகுபாடு தகர்ப்பு,
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
மூடப்பழக்கங்கள்  வெளியேற்றம்

அறிவியல் கண்ணோட்டம்...

இவற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர் பெரியார்.


மட்டுமன்றி,


சுயமரியாதை அவமதிப்பு,
ஆணாதிக்க ஆணவம்,
தீண்டாமைப் புத்தி,
சாதிப் பெருமை, 
சமூக ஒதுக்கல், 
பொருளாதார சமத்துவமின்மை, 
மூடத்தன போதனை,
அறிவியல் பார்வை தடுப்பு...
எல்லாவற்றுக்கும் அடிப்படையான உழைப்புச் சுரண்டல்...
இவற்றை முடிவுக்குக் கொண்டுவரும்
நெடும் போராட்டத்தில் என்றென்றும்
நம்முடன் என்றென்றும்
நிற்கிறார்...

                                     பெரியார்...

மானம் கெடுப்பாரை
அறிவைத்தடுப்பாரை
மண்ணோடு
பெயர்த்த
கடப்பாரை! 
வானம் உள்ளவரை
வையம் உள்ளவரை 
யார் இங்கு மறப்பார்
பெரியாரை!

-உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்...

-இன்று செப் 17 பெரியார் பிறந்த நாள்...

Wednesday, 7 September 2016

Dharana on 07/90/2016 by United Forum of BSNL Executives' Associations and Unions

The day long Dharna was conducted at Virudhunagar SSA in front of GM Office Compound. The Dharna was presided by Com. A.Narayanan, Sr AO and District President, AIBSNLEA demanding

1. Immediate replacement of intermediary pay scales of E1-A and E2-A by standard pay scales of E2 and E3 for JTO and SDE equivalent cadres w.e.f 01.01.2007 as per the recommendation of the Joint Committee.
2. Extending 30% Superannuation benefit to BSNL recruited Employees as per the recommendation of 2nd PRC.
3. Implementation of CPSU Cadre Hierarchy and first Time Bound Promotion as per the recommendation of Joint committee.

50 and add comrade from various stations of the SSA participated in the Dharna.
The dharna was conducted as per the  call given by United Forum of BSNL Executives' Associations and Unions. Com. P. Govindarajan, SNEA(I),  Com. S.Senthilkumar, District Secretary, SNEA(I), Com. Victor Samson , Circle President, AIGETOA 
Com. M.Pitchaikani, Dist Secretary AIBSNLEA spoken on the issues which the field unit are facing day to day.


Friday, 12 August 2016

Serve with a smile (SWAS) Rally at Virudhunagar

As per the clarion call given by the United Forum of BSNL Employees and Unions, a Rally on SWAS was organised at Virudhungar on 10/08/2016.

The rally was flaged by the General Manager and the Chief Manager, SBI Virudhunagar. 

About 200 employees of BSNL including Executives participated the rally. 

The rally started from GM Office Gate and passed through the Main Bazaar and culminated at Deshbandhu maidan. Some moments of the rally.Wednesday, 3 August 2016

மாநிலப்பொருளாளர் பணி நிறைவு...

எண்பதுகளின்  துவக்கத்தில்  நான் தபால் தந்தித்துறையில் எழுத்தராக வேலைச்சிறையினில் அடைபட்ட சமயம். 1981 டிசம்பரில் கல்கத்தா அகில இந்திய மா நாடு.அப்புறம் 1982 மயிலாடுதுறை மா நில மா நாடு.அப்போதிருந்து நான்  பார்த்த ஒரு தோழர். ஒவ்வொரு கேள்வியும் கோடி பெறும். அத்தகைய ஆளுமை கொண்ட  அருமை நண்பர் கடலூர் வெங்கடேசன் பணி நிறைவு பெற்று விட்டார் (31/07/2016) என்பதை ஒப்ப மனம் மறுக்கிறது...


Point of order என்று அறிஞர் அண்ணா போல ஓர் விரல் உயர்த்தி நின்ற அந்த குரல்  பழைய NFPTE சங்கத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது... அது   சென்னை (அ இ மா நாடு 1984) , தஞ்சாவூர் 1986 , கோயமுத்தூர், சேலம், தஞ்சாவூர் என தொடர்ந்து கொண்டே வந்தது. அந்த நீள் பட்டியலில் கடைசியாக 1994 ஏப்ரல் திருவனந்தபுரம் அ இ மா நாடு... மொனி போஸ் மற்றும் நம்பூதிரி தலைமையில் இயக்கம் கண்ட நேரம் அது. அப்புறம்  நாம் காலத்தில் கைகளில் சிக்கி அதிகாரிகளாக உருமாற்றம் கண்டோம். தோழர் வெங்கடேசனைப்போல் நானும் தான். கால நதியின் கட்டளைக்கிணங்க இந்தப்பணி நிறைவை ஏற்றுக்கொண்டாலும் முரண்பட்ட சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம் காத்திருக்கிறது . அம்பானிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அள்ளி வழங்குவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதமானத்திற்கும் அதிகமாக சம்பள உயர்வு கொடுக்க இயலாது என்னும் கொடூர மன நிலையினை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஒவ்வொருவரும் இன்றைக்கு...

அவரது பணி நிறைவு... 

அதனை ஒட்டிய  AIBSNLEA TN CIRCLE கடலூர் 

செயற்குழு...05/08/2016 

சந்திப்போம் ...சிந்திப்போம்...

வாழ்த்துகளுடன்,


-அ. நாராயணன் மூத்த கணக்கதிகாரி

FORUM சார்பாக ஆர்ப்பாட்டம்...

BSNL மற்றும் MTNL நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தை கேந்திர கூட்டாளியாகக்கொண்டு வந்து, நிர்வாகத்திலும் தனியாரை அனுமதிக்க ஒப்புதல் கொடுத்துள்ள நிதி ஆயோக் முடிவை கண்டித்து இன்று மாவட்டம் முழுவதும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் GM அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு AIBSNLEA மாவட்ட தலைவர் தோழர் அ. நாராயணன் SRAO தலைமை வகித்தார். SNEA மாவட்ட செயலாளர்  தோழர்  செந்தில்குமார், AGM(Plg), AIBSNLOA மாநில சங்க நிர்வாகி கனகவேல், DGM(Fin), BSNLEU மாவட்ட செயலர் S. ரவீந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .
தோழர் இளமாறன் எழுச்சிமிகு கோஷங்களை எழுப்ப சேவா BSNL (R ) மாவட்ட செயலர் தோழர் V.பரமேஸ்வரன் நன்றியுரை கூறி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார் .

Wednesday, 13 January 2016