Monday, 30 June 2014

மாநில மாநாட்டு வரவேற்புக்குழுவிலிருந்து . . .

தோழர்களே!
மதுரையில் 29/06/2014  ந் தேதி நடந்து முடிந்த  மாநிலச் செயற்குழுவில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

5-வது மாநில மாநாடு
மாநாட்டு நன்கொடை (ஒவ்வொரு உறுப்பினரும்) : ரூ.1000
சார்பாளர் கட்டணம் : ரூ. 600
மாநாடு நடைபெறும் மண்டபம்:
"MADITSSIA   A/C அரங்கம்"
1A-4A, அம்பேத்கர் சாலை, மதுரை-20
நாள்: 17-09-2014 & 18-09-2014 (PRE CEC ON 16/09/14)

அருமைத் தோழர்களே! செயற்குழுவின் விவாதத்தின் போது மாநாடு நடைபெறும் நாட்கள் செப்டம்பர் 19,20 & 21 என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், மாநில மாநாடு மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்ற உத்வேகத்தில்அந்த தேதிகளில் முடிவு செய்திருந்த  அரங்கத்தின் அளவு சற்று சிறிதாக இருப்பதாக வரவேற்புக்குழு கருதியதால்  புதிய அரங்கு "MADITSSIA   A/C அரங்கம்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மாநாடு சிறப்பாக நடத்த  போதுமான நிதி உதவி தருவதற்கு அனைத்து மாவட்டச் செயலர்களும் உறுதி அளித்ததின் அடிப்படையில் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதனால் சார்பாளர் கட்டணம் ரூ.800 இல் இருந்து ரூ.600ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

மாநாட்டிற்கு தமது தனிப்பட்ட நன்கொடையாக  ரூபாய் பத்தாயிரத்தை (ரூ.10000/- ) , தோழர். இராதாகிருஷ்ணன் (DS-VGR)  கொடுக்கிறார் என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.  இத்தகைய ஒத்துழைப்பு உண்மையிலே எங்களை ஊக்கப்படுத்துகிறது.  

தோழர்களே! இது நமது சங்கத்தின் மாநாடு. நிர்ணயக்கப்பட்ட நன்கொடை ரூ.1000 என்று தயவு செய்து  மலைத்து விடாதீர்கள். நாம் பெரும் ஊதியத்தை ஒப்பிடும் போது, இத்தொகை மிகவும் குறைவு  என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.


ஆகவே, வரவேற்புக்குழுவின் சார்பாக, தமிழகம் முழுவதிலும்  உள்ள அனைத்து AIBSNLEA தோழர்களையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். உங்கள் நன்கொடையை அந்தந்த மாவட்டச் செயலரிடம் மனமுவந்து கொடுங்கள்!.  நமது 5-வது மாநில மாநாடு சிறக்க முழு ஆதரவு தாருங்கள்! வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment