Tuesday, 3 December 2013

COMMITTEE FOR EVOLVING NEW FORMULA FOR PLI



போனஸ் அல்லது PLI என்பது
C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்புடைய பிரச்சனையா?
அதில் A மற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு தொடர்பில்லையா?
இல்லை, உரிமை இல்லையா?
போனஸுக்கான புதிய ஃபார்முலாவை உருவாக்குவதற்காக
ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு,
அந்த கமிட்டி 9.12.2013 அன்று கூடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கமிட்டியில், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் பிரிவு மற்றும் நான்காம் பிரிவு சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டுமே
உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதிகாரிகள் சங்கங்கள் புறக்கணிக்கப் பட்டிருக்கின்றன.
இது JCMல் எழுப்பப்பட்ட பிரச்சனை என்பதால்
அதிகாரிகள் சங்கங்கள் தேவை இல்லை என்று முடிவு எடுத்திருந்தால்,
அது சரி இல்லை என்பதை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. JCMக்குள்ளேயே விவாதிக்கப் பட்டிருந்தால்
மற்றவர்கள் கருத்து தேவை இல்லாமல் போகலாம்.
ஆனால் JCMக்கு வெளியே, ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு
ஒரு பிரச்சனை ஆலோசிக்கப்படும் பொழுது
அனைத்துச் சங்கங்களின் கருத்துக்களுக்கும் வாய்ப்பளிப்பதே,
சரியாக இருக்கும்.
கமிட்டியில் முறையான முடிவுகள் எடுக்க தடை இருந்து,
அதற்காக ஒரு போராட்டம் தேவைப்பட்டால்
அனைத்துப் பிரிவு ஊழியர்களின் உறுதியான பங்களிப்புக்கு
 அதுவே உறுதுணையாக இருக்கும்.

No comments:

Post a Comment