Friday, 23 August 2013

சங்க அங்கீகார வரைவுத் திட்டம்



அதிகாரிகள் சங்கங்களின் அங்கீகாரம் தொடர்பான ஒரு வரைவுத் திட்டத்தை நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.
  அதன் முக்கியச் சாராம்சங்கள்: 
  • அங்கீகார நடைமுறையில் பங்கு பெறும் சங்கங்கள், கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • சங்கம் துவக்கி, குறைந்த பட்சம் ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.
  • ஊதியத்தில் பிடிக்கப்படும் சந்தா எண்ணிக்கையைக் கொண்டு பெரும்பான்மை சரிபார்ப்பு முடிவு செய்யப்படும்.
  • 35% க்குக் குறையாமல் அதிக வாக்குகள் பெறும் ஒரே ஒரு சங்கத்திற்கு ”பிரதிநிதித்துவச் சங்கம்” அந்தஸ்து வழங்கப்படும்.
  • 15% க்குக் குறையாமல் இரண்டாவது அதிக வாக்குகள் பெறும் சங்கத்திற்கு “துணைச் சங்கம்” அந்தஸ்து வழங்கப்படும்.
  • அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
  • தலைவர், உதவித்தலைவர், செயலர், உதவிச்செயலர், பொருளாளர் ஆகிய பதவிகளில் மொத்தம் 4 முறைக்கு மேலும், தொடர்ச்சியாக 2 முறைக்கு மேலும் ஒரு நபர் நீடிக்கக்கூடாது.
  • CHQ அமைப்பு 15 உறுப்பினர்கள் 
  • CIRCLE அமைப்பு 9 உறுப்பினர்கள் 
  • SSA அமைப்பு 4 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
  • சங்க நிர்வாகிகள், இலாகாவில் பணி புரியும் ஊழியராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment