Monday, 29 April 2013

ஒன்றுபட்ட செயல்பாடு, ஒன்றே நம் இலக்கு!



BSNLEU, NFTE BSNL
ஆகிய சங்கங்களுக்கு
பெரும்பான்மைச் சங்கங்களுக்கான அங்கீகாரமும்
FNTO, BTEU சங்கங்களுக்கு
சில வரையறுக்கப்பட்ட சலுகைகளும்
வழங்கி உத்தரவு வெளி வந்துள்ளது.
அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்!

BSNL நிறுவனமும் ஊழியர்களாகிய நாமும்
தற்போது இருக்கும் இக்கட்டான நிலையில்,
இந்த அங்கீகாரம் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒன்றுபட்டு -
பிரச்சினைகளை விவாதிப்பது,
பிரச்சினைகளின் தீர்வுக்கு வழி காண்பது,
என்ற புதிய அத்தியாயத்தைத் துவக்குவதற்கு
இந்த அங்கீகாரம் வழி வகுக்கிறது.

DOT காலத்தில் இருந்த JCM நடைமுறை
தற்போது வேறு வடிவத்தில்
புதிய அங்கீகார விதிமுறைகள் வாயிலாக
தற்போதைக்கு மீண்டும் வந்திருக்கிறது.
ஒரே வித்தியாசம் தான்!
அப்போது, ’ஒரே சங்கம் – இரண்டு கருத்துக்கள்’;
இப்போது, ’இரண்டு சங்கம் – இரண்டு கருத்துக்கள்’.

பிரச்சனைகளில் கருத்தொற்றுமையும்
அதன் தீர்வுக்கான ஒருமித்த செயல்பாடும்
NON EXECUTIVES மற்றும் EXECUTIVES
சங்கங்களின் ஒன்றிணைந்த செயல்பாடும் தான்
இன்றைய இமாலயத் தேவை!

No comments:

Post a Comment