Wednesday, 10 April 2013

என்ன செய்யப் போகிறோம்?



BSNL மற்றும் DOTக்கு 
 இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நமக்கு உணர்த்தும் விஷயங்கள்:
  •   BSNLன் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. 2007–08 ஆம் ஆண்டில் 38000 கோடியாக இருந்த வருமானம் படிப்படியாகக் குறைந்து 2012-13ல், 25000 கோடியாகக் குறைந்திருக்கிறது. 5 ஆண்டுகளில் 13000 கோடி வருமானம் குறைந்திருக்கிறது.
  •    2007-08 ஆம் ஆண்டு, 33636 கோடியாக இருந்த செலவினங்கள் 2012-13 ஆம் ஆண்டு 34500 கோடியாக உயர்ந்திருக்கிறது. வருமானம் குறைந்ததாலும் அதிக கட்டுப்பாடுகள் காரணமாகவும் செலவு மிக அதிகமாக உயரவில்லை.
  •          2007-08 ஆம் ஆண்டு 3009 கோடி லாபம் என்பது படிப்படியாகத் தேய்ந்து, 2012-13 ஆம் ஆண்டு 8714 கோடி நஷ்டம் என்ற நிலையை அடைந்திருக்கிறது.
  •      2007-08 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்தில், ஊழியர் ஊதியம் 23.14% ஆக இருந்தது. வருமானம் குறைந்ததாலும் 2வது IDA ஊதிய மாற்றத்தின் காரணமாகவும், 2012-13 ஆண்டில் அது 53.38% ஆக உயர்ந்து இருக்கிறது.
  •          முதன் முறையாக பணப் பற்றாக்குறை என்ற நிலை வந்திருக்கிறது. மார்ச் 2013 முடிவில் 303 கோடி பற்றாக்குறை வந்திருக்கிறது. 2013-14 முடிவில் பணப் பற்றாக்குறை 14248 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
  •        2011-12ல் 1320 கோடியாக இருந்த கடன் 2012-13ல் 2321 கோடியாக அதிகரித்திருக்கிறது. 2013-14ல் புதிய கடனாக 11540 கோடி தேவைப்படுகிறது.
  •            2007-08ல் 88128 கோடியாக இருந்த நிறுவனத்தின் NET WORTH 2013-14ல் 56425 கோடியாகக் குறைந்திருக்கிறது.
  •                 2013-14ல் சராசரி மாத வருமானம் 2655 கோடி. இதில், சராசரி மாத ஊதியம் 1260 கோடி. டீசல், மின்சாரம் மாதம் 210 கோடி. இதர நடைமுறைச் செலவு 1730 கோடி. புதிய வளர்ச்சிப் பணி 460 கோடி. சராசரி மாதப் பற்றாக்குறை 1000 கோடி.
  •                தவிர்க்க முடியாத, ஊதியம், மின்சாரம், டீசல், மற்றும் பராமரிப்பு போன்ற நடைமுறை செலவுகளுக்கே மாதம் 500 கோடி கடன் தேவைப்படுமென்றால், வளர்ச்சித் திட்டங்களுக்கு சாத்தியமில்லை. வளர்ச்சித் திட்டங்கள் இல்லையென்றால் வருமான உயர்வும் சாத்தியமில்லை.
  •           மொத்தத்தில், BSNL நிதி நிலை, அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது. 
என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment